காரோனா பாதித்த வீராங்கனைக்கு விளையாட வாய்ப்பு; வெடித்தது புதிய சர்ச்சை!

Updated: Mon, Aug 08 2022 12:41 IST
Image Source: Google

காரோனா பாதித்த வீராங்கனைக்கு விளையாட வாய்ப்பு; வெடித்தது புதிய சர்ச்சை!

காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் கரோனா உறுதி செய்யப்பட்ட வீராங்கனைக்கு விளையாட வாய்ப்பு கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காமன்வெல்த்-ல் கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது

இந்த போட்டிக்கான டாஸ் இரவு 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட சூழலில் தாமதமானது. மழைப்பொழிவு, வெளிச்சமின்மை என எந்தவொரும் பிரச்சினையும் இன்றி டாஸ் தள்ளிப்போனதால் ரசிகர்கள் குழம்பினர். எனினும் டாஸ் தாமதமானாலும், திட்டமிட்டபடியே போட்டி 9.30 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் இந்த குழப்பத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக கரோனா பரிசோதனை எடுப்பது வழக்கம். அந்தவகையில் நேற்று எடுக்கப்பட்ட சோதனையில் ஆஸ்திரேலிய வீராங்கனை தஹிலா மெக்ரத்திற்கு கொரோனா உறுதியானது. மேலும் அவருக்கு அறிகுறிகள் இருந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் அவர் இறுதிப்போட்டியில் கலந்துக்கொள்ள அனுமதி கேட்டுள்ளனர்.

நீண்ட நேரமாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பிறகு மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி தஹிலா விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து தேசியகீதம் ஒலிக்கப்பட்ட போது, அவர் அணியினருடன் களத்தில் இல்லாமல் வெளியே இருந்தார். இதே போல டக் அவுட்டில் தனியாக மாஸ்க் அணிந்தவாறு இருந்தார். தனது பேட்டிங்கிற்கு மட்டுமே வந்து செல்ல அனுமதி கிடைத்தது.

இத்தனை பிரச்சினைகளுக்கு இடையே முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்களை குவித்தது. கரோனா பாதிப்புடன் விளையாடிய தஹிலா மெக்ராத் 4 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்நிலையில் இதுகுறித்து போட்டி முடிவுக்கு பின் பேசிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், “அவர்கள் டாஸ் போடுவதற்கு முன் தஹிலாவுக்கு தொற்று இருப்பதாக எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று, ஏனெனில் காமன்வெல்த் முடிவை எடுக்க வேண்டும்.

அவள் (தஹிலா மெக்ராத்) உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் நாங்கள் நன்றாக இருந்தோம், எனவே நாங்கள் விளையாட முடிவு செய்தோம். நாங்கள் விளையாட்டு வீரரின் மனதைக் காட்ட வேண்டியிருந்தது. நாங்கள் தஹிலா வேண்டாம் என்று சொல்லாததில்  மகிழ்ச்சியடைகிறோம், ஏனெனில் அது அவளுக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும்" என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை