இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார் - பிசிசிஐ!

Updated: Mon, Sep 13 2021 16:04 IST
Image Source: Google

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மூன்று வடிவிலான இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வருகிறார். எனினும் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையையும் அவரால் வெல்ல முடியவில்லை. 

இதனால் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு கேப்டன் பதவியிலிருந்து விலகி, பேட்டிங்கில் அவர் கவனம் செலுத்தவுள்ளதாகவும், ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. 

இது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது. இந்நிலையில் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வதந்தியை பிசிசிஐ மறுத்துள்ளது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதுகுறித்து பிசிசிஐயின் பொருளாளர் அருண் துமால் கூறுகையில், “இவையெல்லாம் அபத்தமானவை. அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. ஊடகங்களில் மட்டுமே இவை விவாதிக்கப்பட்டு வருகின்றன. டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 அணிகளுக்குத் தனித்தனி கேப்டன்களை நியமிப்பது பற்றி பிசிசிஐ விவாதிக்கவில்லை. எல்லாவிதமான போட்டிகளிலும் விராட் கோலியே கேப்டனாக நீடிப்பார்” என்று விளக்கம் அளித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை