கடந்த 2021 டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வெல்லும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்த நிலையில், ஒட்டுமொத்த இந்தியர்களின் கனவை சுக்குநூறாக்கிய பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சஹின் அப்ரிடி, இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா,விராட் கோலி,கே எல் ராகுல் ஆகியவர்களின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியை சீர்குழைய வைத்தார். 

Advertisement

இதனால் இந்திய அணி உலக கோப்பை தொடரை வெல்லும் கனவு முற்றிலுமாக சிதைந்தது. இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி நடைபெறும் ஆசிய கோப்பையிலும் இதே போன்று ஒரு நிகழ்வு மீண்டும் ஏற்பட்டு விடுமோ என்று இந்திய ரசிகர்கள் உட்பட கிரிக்கெட் விமர்சகற்களும் தங்களுக்கு மத்தியில் விவாதித்து வருகின்றனர்.

Advertisement

ஆனால் நல்ல பார்மில் இருக்கும் இந்திய வீரர்கள், சகின் அப்ரிடியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்து விடுவார்கள் என்று இந்திய அணிக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனரியாவே, ஷாஹின் அஃப்ரிடியின் பந்துவீச்சை இந்திய அணி வீரர்கள் சமாளித்து விடுவார்கள் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய டேனிஷ் கனேரியா “ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இருக்கும் வரை ஷாஹின் அஃப்ரிடியை பார்த்து பயப்படத் தேவையில்லை, இந்திய வீரர்கள் ஷாஹின் அஃப்ரிடி வீசும் ஸ்விங் பந்துகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும், அவர்கள் எப்படிப்பட்ட நிலையை சமாளிக்க துணிந்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக உடம்பில் போடப்படும் பந்து மற்றும் லெக்-சைடில் போடப்படும்  பந்தை கையாள தெரிந்திருக்க வேண்டும்.

ஷாஹின் அஃப்ரிடிக்கு எதிராக சூரியகுமார் யாதவ் ஸ்கொயர்-லெக்கில் அடிக்கும் பிலிக் ஷாட் முக்கியமான ஒன்றாக இருக்கும்.  உலகக் கோப்பை தொடர்க்கு பின் தினேஷ் கார்த்திக் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடையாது என்னை பொறுத்தவரையில் தினேஷ் கார்த்திக் ஆசிய கோப்பையில் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Advertisement

பெரும்பாலானவர்கள் தினேஷ் கார்த்திக்கின் உடற்தகுதியையும், அவருடைய ஃபார்மையும், பினிஷிங்கையும் கவனித்துக்கொண்டு வருகினறனர். தினேஷ் கார்த்திகைத் தவிர்த்து ஹர்திக் பாண்டியாவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இது இவர்களுடைய கடைசி டி20 உலக கோப்பை தொடராகவும் இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News