ராஜஸ்தான் அணியின் தொடர் தோல்விகள் ஆச்சரியமளிக்கிறது - ஷேன் வாட்சன்!
அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவிக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் சாம் கரண், ஹர்ஷல் படேல், ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். ஆனாலும் இப்போட்டியில் கேப்டன் இன்னிங்ஸ் விளையாடிய சாம் கரண் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 63 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம் கரண் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக நான்காவது தோல்வியைத் தழுவியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் தொடர் தோல்விகள் தனக்கு ஆச்சரியமளிப்பதாக அந்த அணியின் முன்னாள் வீரர் ஷேட் வாட்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக தொடங்கிய ராஜஸ்தான் அணியின் தற்சமயம் அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்து வருவாது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அவர்கள் எந்த பலவீனமுல் இல்லாத ஒரு அணியாக தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
ஆனால் தொடரின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் வேளையில் அவர் தங்கள் பலவீனத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு நல்லதல்ல. மேலும் அவர்கள் நிச்சயம் தங்கள் உத்வேகத்தை இழந்துவிட்டார்கள். அதிலும் குறிப்பாக நேற்றிரவு அவர்கள் விளையாடிய விதம் மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் இருந்தது. அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் எப்போது அனைத்து போட்டிகளுக்காவும் தயாராக உள்ளார். அவருடன் ரியான் பராக் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் மட்டுமே தங்கள் வேலையைச் செய்து கொடுத்தனர். ஆனால் மற்ற வீரர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றத்தைக் கொடுத்து வருகின்றனர்.
அணியின் மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டிய நேரத்தில் இப்படி அடுத்தடுத்து சொதப்பி வருவது அணிக்கு நல்லதல்ல. அதனால் அவர்கள் அடுத்த போட்டியில் வெற்றிபெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கான உத்வேகத்தை பெறவேண்டும். மாறாக அவர்கள் வேறுதிசையில் பயணித்தால் நிச்சயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரசிகர்கள் அதனை விரும்ப மாட்டார்கள். இதனால் அவர்கள் நிச்சயம் தங்கள் வெற்றியை பெறவேண்டி அடுத்த போட்டியில் களமிறங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.