இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் நேற்று காலமானார். ராணுவ அதிகாரியான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.
Advertisement
இந்நிலையில், திரிலோக்சந்த் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தந்தையை இழந்த சுரேஷ் ரெய்னா அவரது பிரிவை உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Advertisement
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பதிவில், “தந்தையை இழந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவரது மறைவால் எனது வலிமையின் தூணை இழந்துவிட்டேன். அவர் தனது கடைசி மூச்சு வரை உண்மையான போராளியாக இருந்தார். உங்களது ஆன்மா சாந்தியடையட்டும் அப்பா. உங்களை எப்போதும் மிஸ் செய்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.