பந்துவீச்சில் எதிரணியை திணறடித்த நூர் ரஹ்மத் - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியில் ஸாக் கிரௌலி மற்றும் டாம் அபெல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டாம் அபெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதில் டாம் அபெல் 57 ரன்களையும், ஸாக் கிரௌலி 38 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழகாமல் இருந்த மார்கோ ஜான்சன் 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர்.
இதன்மூலம் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது. சூப்பர் ஜெயண்ட்ஸ் தரப்பில் நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தான்ர். இதில் அதிகபட்சமாகவே பிரைஸ் போர்சன்ஸ் 23 ரன்களை சேர்த்தது தான்.
இதனால் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஈஸ்டர்ன் கேப் தரப்பில் ரிச்சர்ட் கிளீசன், ஓட்னியல் பார்ட்மேன் மற்றும் லியாம் டௌசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இப்போட்டியில் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும் அந்த அணி வீரர் நூர் அஹ்மத் தனது அபாரமான பந்துவீச்சு காரணமாக இப்போட்டியின் ஆட்டநாயகன விருதை வென்றார். அதன்படி இப்போட்டியில் 4 ஓவர்களை வீசிய நூர் அஹ்மத் 25 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் நூர் அஹ்மத் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.