யுஸ்வேந்திர சஹால் அசத்தல் பந்துவீச்சு; வலிமையான முன்னிலையில் நார்தாம்டன்ஷைர்!

Updated: Wed, Sep 11 2024 09:39 IST
Image Source: Google

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன்2 தொடரின் 47ஆவது லீக் ஆட்டத்தில் நார்த்தாம்டன்ஷைர் - டெர்பிஷைர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. நார்த்தாம்டனில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நர்த்தாம்டன்ஷைர் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பிரித்ரி ஷா, கஸ் மில்லர், புரோக்டர், ஜேம்ஸ் சேல்ஸ் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் விளையாடிய வீரர்களில் சைஃப் ஸைப் 90 ரன்களையும், ஜஸ்டின் பிராட் 45 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கவில்லை. இதன்மூலம் நார்த்தாம்டன்ஷைர் அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டெர்பிஷைர் அணி தரப்பில் ஸாக் சேப்பல், ஆண்டர்சன், ஜேக் மோர்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய டெர்பிஷையர் அணியில் லூயிஸ் ரீஸ் 50 ரன்களையும், மேட்சன் 47 ரன்களையும், புரூக் கெஸ்ட் 28 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் யுஸ்வேந்திர சஹால் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் டெர்பிஷைர் அணியானது 165 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. 

நார்த்தாம்ப்டன்ஷைர் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 54 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த நார்தாம்ப்டன் அணியில் கஸ் மில்லர் 42 ரன்களையும், ஜேம்ஸ் சீல்ஸ் 40 ரன்களையும், சைஃப் ஸைப் 26 ரன்களை, ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ள ராப் 46 ரன்களையும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

 

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நார்த்தாம்டன்ஷைர் அணியானது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்துள்ளது. இதனையடுத்து இன்று நடைபெறும் மூன்றாம் நாள் ஆட்டத்தில் 232 ரன்கள் முன்னிலையுடன் அந்த அணி இன்னிங்ஸைத் தொடரவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய யுஸ்வேந்திர சஹாலின் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::