டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 110 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, அதனை 14.3 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி எட்டி அசத்தியது. 

Advertisement

இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய கேப்ட்ன் விராட் கோலி பீல்டிங்குக்கு களம் இறங்கிய போது வீரர்களிடம் போதுமான உத்வேகம், துணிச்சல் இல்லை என தெரிவித்துள்ளார்.

Advertisement

தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், “பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நாங்கள் போதுமான அளவுக்கு தைரியமாக செயல்படவில்லை. இதே போல் பீல்டிங்குக்கு களம் இறங்கிய போது வீரர்களிடம் போதுமான உத்வேகம், துணிச்சல் 

Also Read: T20 World Cup 2021

இல்லை. ஆனால் எங்களை விட நியூசிலாந்து வீரர்கள் தீவிரத்துடன் செயல்பட்டனர். இந்திய அணிக்காக விளையாடும் போது நிறைய எதிர்பார்ப்புகள், நெருக்கடிகள் எப்போதும் இருக்கும். அதை சமாளித்து தான் விளையாட வேண்டும்” என்று தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News