கிரிக்கெட்டையே வெறுத்துவிட்டேன் - பென் ஸ்டோக்ஸ்!

Updated: Wed, Aug 24 2022 08:59 IST
Image Source: Google

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ். சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், அண்மையில் தான் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது கேப்டன்சியில் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றுவருகிறது.

இங்கிலாந்து அணிக்காக 84 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,320 ரன்கள் அடித்ததுடன், 185 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 105 ஒருநாள் மற்றும் 34 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடினார். கடந்த 2 சீசன்களாக அவர் ஐபிஎல்லில் ஆடவில்லை. சர்வதேச கிரிக்கெட்டிலும் கூட ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்துவிட்டார். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

இந்நிலையில், கிரிக்கெட் விளையாடிக்கொண்டே இருந்ததால், தனது தந்தை இறப்பதற்கு முன் கடைசியாக அவரை பார்க்க முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ள பென் ஸ்டோக்ஸ், அதனால் கிரிக்கெட்டையே வெறுத்ததாகவும் தெரிவித்தார். 

2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் பென் ஸ்டோக்ஸின் தந்தை ஜெரால்டு புற்றுநோயால் இறந்தார். அவர் இறப்பதற்கு 11 மாதங்களுக்கு முன்புதான் அவருக்கு புற்றுநோய் இருந்தது கண்டறியப்பட்டது. 2020ஆம் ஆண்டு டிசம்பரில் ஸ்டோக்ஸின் தந்தை இறந்த நிலையில், ஐபிஎல்லில் விளையாடியதால் அவரை கடைசியாக பார்க்க முடியவில்லை என்று ஸ்டோக்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள பென் ஸ்டோக்ஸ், “நான் ஐபிஎல்லில் விளையாட வேண்டும். நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுவது என் தந்தைக்கு பிடிக்கும். ஆனால் அதுவே நான்  கிரிக்கெட்டை வெறுக்க காரணமாக அமைந்துவிட்டது. ஐபிஎல்லில் விளையாடியதால் தான், என் தந்தை இறப்பதற்கு முன் என்னால் அவரை கடைசியாக  பார்க்க முடியாமல் போனது. அத்துடன் கிரிக்கெட்டையே வெறுத்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை