விராட் கோலிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பினேனா? - கங்குலி மறுப்பு!

Updated: Sat, Jan 22 2022 12:55 IST
'Not true': Ganguly on reports of him wanting to send show-cause notice to Kohli (Image Source: Google)

டி20 உலகக் கோப்பைப் போட்டி தொடங்கு முன்பு, டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் விராட் கோலி. அடுத்ததாக, ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். 

டி20 கேப்டன் பதவி விலகிய பிறகு கோலி கூறியதாவது: இந்திய டெஸ்ட், ஒருநாள் அணிகளை வழிநடத்த டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். இதுபற்றி ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மாவிடம் விவாதித்த பிறகே இம்முடிவை எடுத்தேன். கங்குலி, ஜெய் ஷா, தேர்வுக்குழுவினர் ஆகியோரிடமும் இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளேன். இந்திய அணிக்காகத் தொடர்ந்து என்னுடைய திறமையை வெளிப்படுத்துவேன் என்றார். டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒருநாள் அணிக்குத் தலைமை தாங்க தனது விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால் டிசம்பர் மாதம் காட்சிகள் எல்லாம் மாறின. 

கோலியின் முடிவுக்குப் பிறகு இந்திய டி20 அணி கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். இச்சமயத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்து சர்ச்சையை ஏற்படுத்தியது பிசிசிஐ. இதனால் 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்று ஆசைப்பட்ட கோலியின் கனவு தகர்ந்தது. 

டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகிய பிறகு பேட்டியளித்த கங்குலி, டி20 கேப்டன் பதவியில் நீடிக்குமாறு கூறினோம். ஆனால் கோலி அந்த முடிவை ஏற்கவில்லை என்றார். ஒருநாள், டி20 என இரண்டுக்கும் வெவ்வேறு கேப்டன்கள் இருப்பதைத் தேர்வுக்குழுவினர் விரும்பவில்லை. அதனால் தான் ஒருநாள், டி20 ஆகிய அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்தோம் எனப் புதிய முடிவுக்கு விளக்கம் அளித்தார்.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குப் புறப்படும் முன்பு செய்தியாளர்களை இணையம் வழியாகச் சந்தித்த விராட் கோலி, வெளிப்படையாகப் பேசி அதிர்வலைகளை உருவாக்கினார். 

டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என கோலியிடம் கோரிக்கை வைத்ததாக சவுரவ் கங்குலி கூறிய நிலையில் விராட் கோலி இவ்வாறு கூறியது ஆச்சர்யத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 

இந்நிலையில் கோலி அளித்த பேட்டியால் கோபமடைந்த சவுரவ் கங்குலி, கோலியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவெடுத்தார். ஆனால் பிசிசிஐயில் உள்ள பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அம்முடிவைக் கைவிட்டார் எனச் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்தச் செய்தியில் உண்மையில்லை என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை