அசாத்தியமான கேட்ச்சைப் பிடித்த கிளென் பிலீப்ஸ்; இணையத்தில் வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
துபாய் சர்வதெச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 251 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெ ல் 53 ரன்களையும் சேர்க்க, ரச்சின் ரவீந்திரா 37 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 34 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்
இதனையடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. தொடக்க வீரர் ஷுப்மன் கில் 31 ரன்னிலும், நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அரைசதம் கடந்து விளையாடி வந்த ரோஹித் சர்மா 76 ரன்களை சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்துள்ளார். இதன் காரணமாக இந்திய அணி 122 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் கிளென் பிலீப்ஸ் மீண்டும் தனது ஃபீல்டிங் திறமையின் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆல்த்தியுள்ளார். அதன்படி இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை மிட்செல் சான்ட்னர் வீசிய நிலையில் அந்த ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட ஷுப்மன் கில் மிட் ஆஃப் திசையில் பவுண்டரி அடிக்கும் முயற்சியில் பந்தை பலமாக அடித்தார். மேலும் பந்து அவரின் பேட்டில் பட்டு வேகமாக சென்றது.
அப்போது 30யார்ட் வளையத்திற்குள் மிட் ஆஃப் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த க்ளென் பிலீப்ஸ் யாரும் எதிர்பாராத வகையில் அந்த பந்தை தாவிப்பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய செய்தார். இதனால் இப்போட்டியில் 31 ரன்களைச் சேர்த்து விளையாடி வந்த ஷுப்மன் கில்லும் தனது விக்கெட் இழந்த ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் கிளென் பிலீப்ஸ் பிடித்த காணொளி வைரலாகி வருகிறது.
New Zealand Playing XI: வில் யங், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் லேதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன், வில்லியம் ஓ ரூர்க்.
Also Read: Funding To Save Test Cricket
India Playing XI: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி.