உண்மைக்கு புறம்பாக பேசிய நூருல் ஹசன்; ஐசிசி நடவடிக்கை பாயுமா?

Updated: Thu, Nov 03 2022 18:36 IST
Nurul Hasan might be sanctioned for criticising the match officials! (Image Source: Google)

டி20 உலககோப்பையில் இந்தியா, வங்கதேசம் மோதிய ஆட்டத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதில் குறிப்பாக, விராட் கோலி ஃபேக் பீல்டிங் செய்ததாக வங்கதேச வீரர் நூருல் ஹசன் கூறினார். இதனால் எங்களுக்கு வரவேண்டிய 5 ரன்களை நடுவர்கள் தராத காரணத்தால் நாங்கள் தோற்றுவிட்டோம் என்று கூறினார். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

இந்தியாவுக்கு சாதகமாக நடுவர்கள் செயல்பட்டதாக வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் குற்றச்சாட்டினர். இந்த நிலையில், ஐசிசி விதிப்படி, பேட்ஸ்மேன்கள் ரன் ஓடுவதை தடுக்கும் வகையில் பந்து கையில் இல்லாமலே, பந்தை பிடித்து எறிவது போல் செய்கை காட்டி, அதனை நடுவர்கள் கவனித்தால் மட்டுமே 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்படும். ஆனால் கோலி செயும் போது, வங்கதேச வீரர்கள் ரன்களை ஓடி எடுத்து விட்டனர்.

மேலும் இது குறித்து வங்கதேச பேட்ஸ்மேன்கள் நடுவர்களிடம் புகாரும் அளிக்கவில்லை. இதனை நடுவர்களும் பார்க்காத நிலையில், வங்கதேச வீரர் நூருல் ஹசன், ஐசிசி நடுவர்கள் மீது புகார் கூறியுள்ளார். இது ஐசிசி விதிகளுக்கு புறம்பானது என்பதால் , நூருல் ஹசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இது மட்டும் அல்லாமல், இரு அணி கேப்டன்களும் ஒப்பு கொண்ட பிறகு போட்டி மழைக்கு பிறகு தொடங்கப்பட்டது. ஆனால் நூருல் ஹசன் செய்தியாளர்களிடம் பேசும் போது, மைதானம் ஈரமாக இருந்த நிலையில், நடுவர்கள் போட்டியை வேண்டுமேன்றே தொடர்ந்தார்கள். இதனால் நாங்கள் தோற்றோம் என்று உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார்.

இதுவும் நடுவர்கள் மீது பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டு என்பதால், நூருல் ஹசனிற்கு தடை அல்லது ஊதியத்தை அபராதமாக விதிக்க ஐசிசி முடிவு எடுத்துள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில், விராட் கோலி மீது தவறு இல்லை என்பது தெளிவாகிவிடும். எனினும் கிரிக்கெட்டில் பல விதிகள் உள்ளது. அது குறித்து தெரிந்து கொண்டு வீரர்கள் சர்ச்சைகளுக்கு இடம் தராத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை