சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மார்ட்டின் கப்தில்!
2019 ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியில் மகேந்திர சிங் தோனியை ராக்கெட் த்ரோ மூலம் வெளியேற்றிய நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே நியூசிலாந்து அணியில் இருந்து ஓரங்கப்பட்ட மார்ட்டின் கப்தில், டி20 லீக் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வந்தார். அதன்படி, அவர் கடைசியாக 2022ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணிக்காக விலையாடியனார். அதன்பின் கப்திலுக்கு பதிலாக ஃபின் ஆலான் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டதை அடுத்து கப்திலுக்கான வாய்ப்பும் முடிவடைந்தது.
தற்போது 38வயதாகும் மார்ட்டின் கப்தில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்டு பேசிய கப்தில், “சிறுவயதில் நியூசிலாந்திற்காக விளையாட வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது, மேலும் எனது நாட்டிற்காக 367 சர்வதேச போட்டிகளில் விளையாடியதை நம்பமுடியாத அதிர்ஷ்டமாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். ஒரு பெரிய குழுவினருடன் வெள்ளி ஃபெர்ன் அணிந்த நினைவுகளை நான் எப்போதும் போற்றுவேன்.
இந்த தருணத்தில் பல ஆண்டுகளாக எனது குழு உறுப்பினர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்களுக்கு, குறிப்பாக 19 வயதுக்குட்பட்ட நிலையிலிருந்து எனக்குப் பயிற்சி அளித்து, எனது வாழ்க்கையில் தொடர்ந்து ஆதரவையும் ஞானத்தையும் அளித்து வரும் மார்க் ஓ'டோனல் ஆகியோருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். எனது மேலாளர் லீன் மெக்கோல்ட்ரிக் அவர்களுக்கும் ஒரு சிறப்பு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் திரைக்குப் பின்னால் உள்ள அனைத்து வேலைகளை அவர் பார்த்துகொண்டார்.
என் மனைவி லாரா மற்றும் எங்கள் அழகான குழந்தைகள் ஹார்லி மற்றும் டெடி ஆகியோருக்கும் நன்றி. எனக்காகவும் எங்கள் குடும்பத்திற்காகவும் நீங்கள் செய்த தியாகங்களுக்கு லாராவுக்கு நன்றி. எனக்காகவும் நமது குடும்பத்துக்காகவும் தியாகம் செய்த மனைவி லாராவுக்கு மிக்க நன்றி. என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எனக்கு இருந்த மிகப்பெரிய ஆதரவாளர் நீங்கள்தாஅன். இறுதியாக எனக்கு ஆதரவு வழங்கிய அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய சிறந்த வீரர்களில் ஒருவரான மார்ட்டின் கப்தில், இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் 2,586 ரன்களும், 198 ஒருநாள் போட்டிகளில் 7,346 ரன்களும், 122 டி20 போட்டிகளில் 3,531 ரன்களும் எடுத்துள்ளார். இது தவிர, ஒருநாள் உலகக் கோப்பையில் இரட்டை சதம் அடித்த சாதனையையும் படைத்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் தனிநபர் அதிகபட்ச ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.