நியூசிலாந்து vs வங்கதேசம், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sat, Dec 30 2023 17:36 IST
Image Source: Google

வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மவுண்ட் மௌங்கனுய் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் வங்கதேச அணி முதல் முறையாக நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs வங்கதேசம்
  • இடம் - பே ஓவல், மவுண்ட் மௌங்கனுய்
  • நேரம் - அதிகாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

நேரலை

நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

பிட்ச் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் பே ஓவல் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான மைதானமாகும். அதிலும் புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் இருபக்கமும் ஸ்விங் செய்ய முடியும் என்பதால் நிச்சயம் பேட்டர்களுக்கு கடினமான சூழலை உருவாக்க முடியும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வத் வெற்றிக்கு வித்திடலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 18
  • நியூசிலாந்து - 14
  • வங்கதேசம் - 04 
  • முடிவில்லை - 01

உத்தேச லெவன்

நியூசிலாந்து - ரச்சின் ரவீந்திரா, டிம் செய்ஃபெர்ட், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர் (கே), டிம் சௌதீ, இஷ் சோதி, ஆடம் மில்னே, பென் சியர்ஸ்.

வங்கதேசம் - சௌமியா சர்க்கார், மெஹிதி ஹசன் மிராஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), லிட்டன் தாஸ், ரோனி தாலுக்தார், தவ்ஹித் ஹிரிடோய், தன்சிம் ஹசன், அஃபிஃப் ஹொசைன், ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், முஸ்தாஃபிசூர் ரஹ்மான்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: டிம் செய்ஃபெர்ட், ரோனி தாலுக்தார்
  • பேட்ஸ்மேன்கள்: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (துணை கேப்டன்), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ்
  • ஆல்ரவுண்டர்: மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா (கேப்டன்), மஹெதி ஹசன், ஜிம்மி நீஷம்
  • பந்துவீச்சாளர்கள்: இஷ் சோதி, ஷோரிஃபுல் இஸ்லாம்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை