NZ vs ENG,1st test Day 2: வலிமையான நிலையில் இங்கிலாந்து, தடுமாற்றத்தில் நியூசிலாந்து!
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று லார்ட்ஸில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இரண்டாம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 378 ரன்களை எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரர் டேவன் கான்வே 200 ரன்களை குவித்து அசத்தினார். இங்கிலாந்து அணி தரப்பில் அறிமுக வீரர் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இரண்டாம் நாளில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் டோமினிக் சிப்லி ரன் ஏதுமின்றியும், ஜாக் கிரௌலி 7 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ரோரி பர்ன்ஸ் - கேப்டன் ஜோ ரூட் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.
இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களை சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதி, கைல் ஜெமிசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து ரோரி பர்ன்ஸ் 59 ரன்களுடனும், ஜோ ரூட் 42 ரன்களுடனும் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர உள்ளனர்.