NZ vs NED, 2nd ODI: டாம் லேதம் சதத்தால் தப்பிய நியூசிலாந்து!

Updated: Sat, Apr 02 2022 11:25 IST
Image Source: Google

நியூசிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றுவருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், ஹென்றி நிக்கோலஸ், வில் யங், ராஸ் டெய்லர், பிரேஸ்வெல், காலின் டி கிராண்ட்ஹோம் என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்னர் ஜோடி சேர்ந்த டாம் லேதம் - பிரேஸ்வெல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசி அசத்தினார்.

பின் பிரேஸ்வெல் 41 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் டாம் லேதம் 140 ரன்களைச் சேர்த்தார்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களைச் சேர்த்தது. நெதர்லாந்து தரப்பில் ஃபிரெட் கிளாசென் 3 விக்கெட்டுகளையும், வேன் பீக் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திவரும் நெதர்லாந்து அணி தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை