நெதர்லாந்து அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சென்றது. டி20 போட்டி மழை காரணமாக  டாஸ் கூட போடாத நிலையில் போட்டி நடக்கவில்லை. இதனையடுத்து கடந்த மாதம் 29-ந் தேதி முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

Advertisement

நியூசிலாந்து அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அந்த 32 ரன்கள் எடுப்பதற்க்குள் 5 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது. லாதம்-கிராண்ட்ஹோம் சிறிது நேரம் தாக்குப்பித்தனர். 16 ரன்கள் எடுத்த நிலையில் கிராண்ட்ஹோம் அவுட் ஆனார். இதனையடுத்து லாதம்-வுடன் பிரேஷ்வேல் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். ஒரு பக்கம் நிலைத்து ஆடிய லாதம் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். 

இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக லாதம் 140 ரன்கள் எடுத்த ஆட்டமிழக்காமல் இருந்தார். நெதர்லாந்து தரப்பில் வான் பீக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. முதல் 2 விக்கெட்டுகள் உடனே சரிந்த நிலையில் விக்ரம்ஜித் சிங்-பாஸ் டி லீடே ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். 81 ரன்கள் எடுத்த நிலையில் விக்ரம்ஜித் சிங் அவுட் ஆனார்.

இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 34.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நெதர்லாந்து அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

Advertisement

இதன் மூலம் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது. மேலும் இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News