நியூசிலாந்து vs பாகிஸ்தான், முதல் டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Thu, Jan 11 2024 21:37 IST
Image Source: CricketNmore

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக இழந்தது. இந்த தொடர் முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது.

அதன்படி நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளதால் அதற்கு தயாராவதற்கு இரு அணிகளும் இத்தொடரை பயன்படுத்திக்கொள்ளும். மேலும் பாகிஸ்தான் அணியை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி வழிநடத்தவுள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs பாகிஸ்தான்
  • இடம் - ஈடன் பார்க் மைதானம், ஆக்லாந்து
  • நேரம் - காலை 11.40 மணி (இந்திய நேரப்படி)

நேரலை

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை இந்திய ரசிகர்கள் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரத்தில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 34
  • நியூசிலாந்து -13
  • பாகிஸ்தான் - 20
  • முடிவில்லை - 01

பிட்ச் ரிப்போர்ட்

ஆக்லாந்திலுள்ள ஈடன் பார்க் மைதானம் வரலாற்றில் பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இதனால் இங்கு பந்துவீச்சாளர் ஆதிக்கம் செலுத்துவது கடினம். மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் நிச்சயம் பேட்டர்கள் ஆதிக்கத்தை செலுத்து பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்துவார்கள்

உத்தேச லெவன்

நியூசிலாந்து: டெவான் கான்வே, டிம் செய்ஃபெர்ட், கேன் வில்லியம்சன் (கே), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், டிம் சௌதி, மேட் ஹென்றி, ஆடம் மில்னே, இஷ் சோதி.

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், சைம் அயூப், பாபர் ஆசாம், ஃபகார் ஸமான், ஆசம் கான், இஃப்திகார் அகமது, அமீர் ஜமால், ஷாஹீன் அஃப்ரிடி (கே), ஹாரிஸ் ரவுஃப், உசாமா மிர், அப்ரார் அஹ்மது.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: டெவான் கான்வே, முகமது ரிஸ்வான், டிம் சீஃபர்ட்
  • பேட்டர்ஸ்: கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ஃபக்கர் ஜமான்
  • ஆல்-ரவுண்டர்கள்: மிட்செல் சான்ட்னர், இஃப்திகார் அகமது
  • பந்துவீச்சாளர்கள்: ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை