முத்தரப்பு டி20 தொடர்: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து - உத்தேச லெவன்!

Updated: Fri, Jul 25 2025 22:44 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை வெல்லும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளது. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீர்ர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதில் நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில் நடப்பு முத்தரப்பு தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளதுடன் புள்ளிப்பட்டியளிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதுமட்டுமின்றி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய இரண்டு டி20 போட்டியிலும் சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மறுபக்கம் தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவிய கையோடு அந்த அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

இதனால் இப்போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்கான என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டிக்கான இரு அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்தெ வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்வியும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் கணிப்பட்ட பிளேயிங் லெவனை இங்கே பார்க்கலாம்.

நியூசிலாந்து உத்தேச லெவன்: டிம் செஃபெர்ட், டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திர, டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), சக்கரி பால்க்ஸ், ஆடம் மில்னே, வில்லியம் ஓ'ரூர்க், ஜேக்கப் டஃபி.

Also Read: LIVE Cricket Score

தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன் : ரஸ்ஸி வான் டெர் டுசென்(கேப்டன்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரூபின் ஹெர்மன், டெவால்ட் பிரீவிஸ், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், கார்பின் போஷ், ஜார்ஜ் லிண்டே, ஜெரால்ட் கோட்ஸி, செனுரன் முத்துசாமி, லுங்கி இங்கிடி, குவேனா மபாகா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை