நியூசிலாந்து vs இலங்கை, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Apr 04 2023 22:59 IST
Image Source: CricketnMore

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்தியது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை துனெடினில் நடைபெறவுள்ளது. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் போட்டி என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs இலங்கை
  • இடம் - யுனிவர்சிட்டி ஓவல், துனெடின்
  • நேரம் - காலை 6.30 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி முதல் போட்டியில் அபாரமாக செயல்பட்டு 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்க்ஷனா சூப்பர் ஓவரில் அபாரமாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

அதேபோல் அந்த அணியின் பேட்டிங்கில் சரித் அசலங்கா, குசால் மெண்டிஸ், குசால் பெரேரா, பதும் நிஷங்கா, வநிந்து ஹசரங்கா என அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளனர். பந்துவீச்சில் ஹசரங்கா, தீக்க்ஷனா, மதுசங்கா, கருணரத்னே ஆகியோர் இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் நாளைய போட்டியில் வெற்றிபெற்றால் இலங்கை அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

அதேசமயம் டாம் லேதம் தலைமையிலான் நியூசிலாந்து அணி கடைசி வரை போராடியும் தோல்வியைத் தழுவியது. அதிலும் குறிப்பாக அந்த அணியில் டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், ரச்சின் ரவீந்திரா ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் பேட்டிங்கில் சோதப்பியதே தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

இதனால் நாளைய போட்டியில் மற்ற வீரர்களும் பேட்டிங்கில் சோபிக்கும் பட்சத்தில் நிச்சயம் நியூசிலாந்து அணி போட்டியில் வெல்லும். பந்துவீச்சை பொறுத்தமட்டில் இஷ் சோதி, ஹென்றி ஷிப்லி, ஆடம் மில்னே, பென் லிஸ்டர் இருப்பது எதிரணிக்கு சவாலாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 21
  • நியூசிலாந்து - 11
  • இலங்கை - 07
  • டிரா - 02
  • முடிவில்லை - 01

உத்தேச லெவன்

நியூசிலாந்து - சாட் போவ்ஸ், டிம் சீஃபர்ட், டாம் லாதம் (கே), டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், ரச்சின் ரவீந்திரா, ஆடம் மில்னே, ஹென்றி ஷிப்லி, இஷ் சோதி, பென் லிஸ்டர்

இலங்கை – குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, பதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்கா, வனிந்து ஹசரங்க, தசுன் ஷனக (கே), சமிக கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, தில்சன் மதுஷங்க, பிரமோத் மதுஷன்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - குசல் மெண்டிஸ், டாம் லாதம்
  • பேட்டர்ஸ் – டேரில் மிட்செல் (கே), மார்க் சாப்மேன், சரித் அசலங்கா
  • ஆல்-ரவுண்டர்கள் - ஜேம்ஸ் நீஷம், வனிந்து ஹசரங்க, தசுன் ஷனக
  • பந்து வீச்சாளர்கள் – ஆடம் மில்னே, மஹேஷ் தீக்ஷனா, ஹென்றி ஷிப்லி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை