உலகக்கோப்பை 2023: போட்டி அட்டவணையில் அதிரடி மாற்றங்கள்!
ஐசிசி உலக கோப்பை தொடருக்கான அட்டவணை அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. இப்போது உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது என்றால் 12 மாதத்திற்கு முன்பு அட்டவணை வெளியிடப்படும். ஆனால் இம்முறை பாகிஸ்தான அணி இந்தியா வருமா வராதா என்ற குழப்பம் ஏற்பட்டு இருந்தது. இதனால் உலககோப்பை தொடர் அட்டவணையை தயாரிக்க தாமதம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஒரு வழியாக கடந்த மாதம் பிசிசிஐ உதவியுடன் அட்டவணை அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியா பாகிஸ்தான் அக்டோபர் 15ஆம் தேதி மோதுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நவராத்திரி அன்றைய தினம் தொடங்குவதால் பாதுகாப்பு அளிப்பது கடினம் என அகமதாபாத் காவல்துறை கூறியது. இதேபோன்று பல்வேறு நகரங்களிலும் நவராத்திரி பூஜை என பல நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் அட்டவணையை மாற்றும் படி பிசிசிஐக்கு கோரிக்கை எழுந்தது.
இதனை அடுத்து 9 போட்டிகளை ஐசிசி மாற்றி இருக்கிறது. அதன்படி இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் அக்டோபர் 15ஆம் தேதிக்கு பதில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் ஆட்டம் அக்டோபர் 10ஆம் தேதியும் அதே நாளில் பாகிஸ்தான் - இலங்கையும் பல பரிட்சை நடத்துகிறது.
அக்டோபர் 12ஆம் தேதி ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோதுகிறது. அக்டோபர் 13ஆம் தேதி நியூசிலாந்து, வங்கதேசமும் பலப் பரிட்சை நடத்துகின்றன. அக்டோபர் 14ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் மோதுகிறது. அக்டோபர் 15ஆம் தேதி இங்கிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப் பரிட்சை நடத்துகின்றன. அதேபோன்று நவம்பர் 11ஆம் தேதி ஆஸ்திரேலியா வங்கதேசம் அணிகள் மோதுகிறது.
அதே நாளில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி அன்று இந்தியாவும், நெதர்லாந்தும் மோத உள்ளன. இந்தியா - நியூசிலாந்து மோதும் ஆட்டம் கடைசி லீக் ஆட்டம் ஆகும் .முதல் அரை இறுதி நவம்பர் 15ஆம் தேதி மும்பையிலும், நவம்பர் 16ஆம் தேதி இரண்டாவது அரை இறுதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது. நவம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.