சர்வதேச கிரிக்கெட்டை தனது பேட்டையாக மாற்றி, அதில் பேட் கொண்டு ஆட்சி செய்து வரும் அரசன் தான் இந்திய வீரர் விராட் கோலி. ஒருநாள், டி20, டெஸ்ட் என இந்தியாவுக்காக மொத்தம் 23,650 ரன்கள் எடுத்துள்ளார். அது தவிர ஐபிஎல் களத்தில் 6499 ரன்கள் சேர்த்துள்ளார். தனியொரு பேட்ஸ்மேன் பதிவு செய்த அதிகபட்ச ரன்கள் இது. 

Advertisement

அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் சாதனைகளுக்கான மைல் கற்களாக மாற்றி அமைப்பவர். நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக ரன் குவிக்க தடுமாறி வருகிறார்.

Advertisement

இந்நிலையில், அவரை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர். முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என அவருக்கு ஆதரவாகவும், அவரது ஆட்டத்தை விமர்சித்தும் வருகின்றனர். '

இத்தகைய சூழலில் ஆர்சிபி அணிக்காக மிஸ்டர் நாக்ஸ் உடன் பேசியுள்ளார் கோலி. அதில் பேசிய அவர், "எனது உணர்வை அவர்களால் உணர முடியாது. எனது வாழ்வை அவர்களால் வாழ முடியாது. அவர்களால் அந்த தருணத்தை வாழ முடியாது. அதனால் இந்த இரைச்சலை எப்படி குறைக்க முடியும்? ஒன்று டிவியை மியூட் செய்துவிட வேண்டும் அல்லது அதனை நாம் கவனிக்க கூடாது. நான் இந்த இரண்டையும் செய்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News