டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படுவேன் - முகமது சிராஜ் நம்பிக்கை!

Updated: Thu, Jun 02 2022 14:54 IST
One bad IPL won't change me: Mohammed Siraj
Image Source: Google

கரோனா தொற்று காரணமாக இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டி  தள்ளி வைக்கப்பட்டன. ஏற்கனவே இந்தியா 2-1 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜுலை 1-5 நாட்களில் கடைசி டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து 3 டி20 போட்டிகளும், 3 ஒருநாள் போட்டிகளும் நடைபெறவிருக்கிறது. 

இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மொசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் மீது ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். மேலும் குவாலிஃபையர் 2 போட்டியில் அவரது பந்துவீச்சினால் தால் ஆர்சிபி அணியால் இறுதிப்போட்டிக்கு முன்னேறமுடியவில்லை என்ற விமர்சனமும் இருந்தது.

இதற்கிடையில் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இந்தியாவின் முகமது சிராஜ் மீண்டும் சிறப்பாக விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்த வருடம் ஐபிஎல் எனக்கு சரியாக அமையவில்லை. கடைசி இரண்டு வருடம் எனது கிராப் உயர்ந்துக்கொண்டுதான் வருகிறது. இந்த வருடம் எனக்கு ஒழுங்காக அமையவில்லையானாலும் நான் கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறேன். எனது திறமை மற்றும் எனது பலமான பந்து வீசும் நுணுக்கங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். 

இங்கிலாந்தில் டுயூக்ஸ் பந்து உபயோகிப்பார்கள். எனக்கு டுயூக்ஸ் பந்தில் பந்து வீசுவது பிடிக்கும். அதற்கு ஆவலாக உள்ளேன். நாங்கள் ஏற்கனவே இந்த தொடரில் 2-1 என முன்னணியில் இருப்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறோம். 

எனது வீட்டிற்கு அருகிலே இருக்கும் மைதானத்தில் பயிற்சி எடுத்து வருகிறேன். டி20யில் இருந்து டெஸ்ட்க்கு மாறுவது பெரிய மாற்றம்.  நீண்ட நேரம் பந்து வீச வேண்டும். தொடர்ந்து பயிற்சி எடுத்து வருவதால் மீண்டும் டெஸ்ட் அணியில் சிறப்பாக விளையாடுவேன்” என தெரிவித்துள்ளார்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை