இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தில் வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது.

Advertisement

மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.  இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் ஏலத்திற்கு முன்னரே வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. 

Advertisement

அந்தவகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களுடைய பார்ல் ராயல்ஸ் அணியும் 2025ஆம் ஆண்டிற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் தொடரில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். இதனை பார்ல் ராயல்ஸ் அணி தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இதன்மூலம் எஸ்ஏ20 தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் எனும் பெருமையை தினேஷ் கார்த்திக் பெற்றுள்ளார். முன்னதாக இந்தியாவில் நடைபெற்று முடிந்த 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் அத்தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து தனது ஓய்வுமுடிவை அறிவித்தார். அதன்பின் அவர் தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் செயல்பட்டுவந்தார். 

மேற்கொண்டு எதிர்வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 தொடரின் தூதராகவும் தினேஷ் கார்த்திக் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ள செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கொண்டு கடந்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக் அதன்பிறகு முதல் முறையாக இந்த தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக், கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி மூன்றாயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 6 அணிகளுக்காக விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 257 போட்டிகளில் விளையாடி 4,842 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News