இந்திய அணியுடன் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்  - சேதன் சக்காரியா!

Updated: Sat, Jun 12 2021 12:15 IST
Image Source: Google

இந்திய அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயாணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான 20 பேர் அடங்கிய இந்திய அணி நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. 

இந்த அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும், கேப்டனாக ஷிகர் தவானும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சேதன் சக்காரியா, நிதீஷ் ராணா, கிருஷ்ணப்பா கௌதம் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

அதிலும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சேதன் சக்காரியா சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் அவருக்கு இந்த வாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இலங்கை தொடரில் அறிமுகமாகவுள்ள சக்காரியா, வேகப்பந்து வீச்சுக்காக சென்னையில் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சக்காரியா, “நான் என்னை வலிமையாக்கவும்,பந்துவீச்சு திறனை மேம்படுத்தவும் சென்னையில் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டேன். அந்த பயிற்சியின் மூலம் நான் பந்துகளை வேகமாக விசுவதற்கு பழகிவந்தேன். தற்போது நான் முன்பைவிட வேகமாக பந்துவீசுவேன் என்று நம்புகிறேன். தற்போது எனக்கு அணியில் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இந்திய அணியுடன் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை