PAK vs AUS, 2nd Test (Day 2): கவாஜா அபாரம்; சதத்தை தவறவிட்ட அலெக்ஸ் கேரி!

Updated: Sun, Mar 13 2022 19:05 IST
Image Source: Google

பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்றுவருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களைச் சேர்த்தது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில் உஸ்மான் கவாஜா 127 ரன்களுடன் களத்தில் உள்ளார். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி, அஸர் அலி தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

அதன்படி இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா 150 ரன்களைக் கடந்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் விளையாடிய நாதன் லையன் 38, ட்ராவிஸ் ஹெட் 23, காமரூன் க்ரீன் 23 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய அலெக்ஸ் கேரி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேரி 93 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 505 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் 28 ரன்களுடன் களத்தில் உள்ளார். பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான், ஃபஹீம் அஷ்ரஃப் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை