PAK vs AUS, 2nd Test (Day 4, Lunch): பாகிஸ்தானுக்கு 506 ரன்கள் இலக்கு!

Updated: Tue, Mar 15 2022 13:10 IST
Image Source: Google

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டவாது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்றுவருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி உஸ்மான் கவாஜாவின் அபாரமான சத்ததின் மூலம் 556 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியால் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 

இதனால் அந்த அணி 148 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 408 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. 

அதன்பின் 97 ரன்களைச் சேர்த்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி டிக்ளரை அறிவித்தது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 506 ரன்களை நிர்ணயித்தது. 

பின்னர் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த அசார் அலி - அப்துல்லா ஷஃபிக் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

இதனால் 4ஆம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து 18 ரன்களைச் சேர்த்துள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற இன்னும் 488 ரன்கள் தேவைப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை