பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒரே டி20 போட்டி இன்று லாகூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
அதன்பின் 23 ரன்களில் முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே ஃபகர் ஸமானும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் இஃப்திகார் அஹ்மதுவும் 13 ரன்களோடு நடையைக் கட்டினார்.
அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் பாபர் ஆசாம் அரைசதம் கடந்தார். பின் 66 ரன்களுடன் பாபர் ஆசமும் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் உஸ்மான் காதிர் அதிரடியாக விளையாடி 18 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் எல்லிஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.