PAK vs ENG, 4th T20I: இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி!

Updated: Sun, Sep 25 2022 23:43 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 3 போட்டிகளின் முடிவில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்க்கும் நிலையில், கராச்சியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மொயின் அலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரிஸ்வானும் பாபர் அசாமும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 11.5 ஓவரில் 97 ரன்களை சேர்த்தனர். பாபர் ஆசாம் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் அடி நொறுக்கி நல்ல ஸ்கோர் செய்துவரும் முகமது ரிஸ்வான், இந்த போட்டியிலும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் சதமடிக்கும் வாய்ப்பிருந்தும் தவறவிட்டார். ஆசிய கோப்பையில் 281 ரன்களை குவித்து அதிக ரன்களை குவித்த வீரராக அந்த தொடரை முடித்தார் ரிஸ்வான்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளில் 68, 88, 8 ரன்களை குவித்த ரிஸ்வான், இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். 67 பந்துகளில் 88 ரன்களை குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 166 ரன்கள் மட்டுமே அடித்தது. 

இதையடுத்து இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில் பிலிப் சால்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், வில் ஜேக்ஸ் என முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களோடு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த பென் டக்கெட் - ஹாரி ப்ரூக் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் டக்கெட் 33 ரன்களிலும், ப்ரூக் 34 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மோயின் அலியும் 29 ரன்களோடு நடையைக் கட்டினார். 

இறுதியில் லியாம் டௌசன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியதுடன், அணிக்கு வெற்றியையும் உறுதிசெய்தார். பின் 34 ரன்கள் சேர்த்திருந்த டௌசன் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் 5 ரன்களை அடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 19.2 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், 2-2 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை