Advertisement

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்களில் சைம் அயூப் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 37 ரன்கள் சேர்த்த நிலையில் கேப்டன் பாபர் அசாமும் தனது விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

பின்னர் களமிறங்கிய உஸ்மான் கான் 5 ரன்களுக்கும், முகமது ரிஸ்வான் 22 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க பாகிஸ்தான் அணி 104 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த இர்ஃபான் கான் - ஷதாப் கான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷதாப் கான் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய இர்ஃபான் கான் ஸ்கோரை உயர்த்தினார். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இர்ஃபான் கான் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக இஷ் சோதி 2 விக்கெட்டுகளையும், ஜேக்கப் டஃபி, மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News