PAK vs NZ, 3rd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Apr 19 2023 20:30 IST
Image Source: CricketNmore

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளில் இரண்டில் பகிஸ்தானும், ஒன்றில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்றுள்ளன. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை ராவல் பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் பாகிஸ்தான் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs நியூசிலாந்து
  • இடம் - ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - இரவு 9.30 மணி

போட்டி முன்னோட்டம் 

பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதலிரண்டு போட்டிகளில் ஆபாரமாக செயல்பட்டு வெற்றியை ஈட்டியது. அதிலும் குறிப்பாக பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், ஃபகர் ஸமான், இஃப்திகார் அகமது ஆகியோர் பேட்டிங்கில் ஜோலித்துள்ளனர். இருப்பினும் கடந்த போட்டி பாகிஸ்தான் அணி பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவில் சோபிக்கவில்லை. அதனால் நாளைய போட்டியில் அவர்கள் மீண்டும் தங்களது அதிரடியை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 

பந்துவீச்சாளர்களைப் பொறுத்தமட்டில் ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப், நசீம் ஷா, ஷதாப் கான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் குறிப்பாக ஹாரிஸ் ராவுஃப் தனது அசுர வேகப்பந்துவீச்சினால் நியூசிலாந்து அணியின் பேட்டர்களை நிலை குழையவைத்துள்ளார் என்பது கூடுதல் பலம்.

மறுபக்கம் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி முதலிரண்டு போட்டியில் பேட்டிங்கில் ஏற்பட்ட சொதப்பலின் காரணமாகவே தோல்வியைச் சந்தித்தது. ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த போட்டியில் டாம் லேதம், டெரில் மிட்செல் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தனர். 

இருப்பினும் மீதமுள்ள பேட்டர்களும் சிறப்பாக செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், நாளைய போட்டியில் அவர்களது செயல்பாட்டின் அடிப்படையிலேயே நியூசிலாந்து அணியின் வெற்றி தோல்வி முடிவுசெய்யப்படும். பந்துவீச்சில் மேட் ஹென்றி, ஹென்றி ஷிப்லி, இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம், ஆடம் மில்னே ஆகியோர் இருப்பது அணியின் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 32
  • பாகிஸ்தான் - 20
  • நியூசிலாந்து - 12

உத்தேச லெவன்

பாகிஸ்தான: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கே), ஃபகார் ஸமான், சயீம் அயூப், ஷதாப் கான், இஃப்திகார் அகமது, இமாத் வாசிம், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா.

நியூசிலாந்து : டாம் லேதம் (கே), சாட் பௌஸ், வில் யங், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், ரச்சின் ரவீந்திரா, ஆடம் மில்னே, இஷ் சோதி, மேட் ஹென்றி, பெஞ்சமின் லிஸ்டர்/ஹென்றி ஷிப்லி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - முகமது ரிஸ்வான், டாம் லேதம்
  • பேட்ஸ்மேன்கள் - பாபர் அசாம் (துணை கேப்டன்), மார்க் சாப்மேன், இஃப்திகார் அகமது
  • ஆல்ரவுண்டர்கள் - ஜேம்ஸ் நீஷம், இமாத் வாசிம், ரச்சின் ரவீந்திரா
  • பந்துவீச்சாளர்கள் - ஷாஹீன் அஃப்ரிடி, ஆடம் மில்னே, ஹாரிஸ் ரவுஃப் (கேப்டன்)
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை