SL vs PAK, 2nd Test: அப்துல்லா ஷஃபிக், அகா சல்மான் அபார ஆட்டம்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!

Updated: Wed, Jul 26 2023 21:45 IST
SL vs PAK, 2nd Test: அப்துல்லா ஷஃபிக், அகா சல்மான் அபார ஆட்டம்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்! (Image Source: Google)

இலங்கைக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2- வது டெஸ்ட் கொழும்புவில் நேற்று முந்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 

பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் நாளிலேயே இலங்கை அணி முதல் இன்னிங்சில் 166 ரன்களில் ஆட்டம் இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளையும், வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து இருந்தது. 

இதையடுத்து நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை அப்துல்லா ஷபிக் 74 ரன்களுடனும், கேப்டன் பாபர் அசாம் 8 ரன்களுடனும் தொடர்ந்தனர். இன்று 2ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களிலேயே மழை குறுக்கிட்டது. 2ஆம் நாள் ஆட்டத்தில் 10 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பாகிஸ்தான் 2 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.

அதன்படி இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் பாபர் ஆசாம் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சௌத் ஷகில் 57 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, சர்ஃப்ராஸ் கான் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அப்துல்லா ஷஃபிக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

பின் 201 ரன்கள் எடுத்த நிலையில் அப்துல்லா ஷஃபிக் ஆட்டமிழக்க, அவருக்கு துணையாக விளையாடி வந்த அகா சல்மான் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 563 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஆகா சல்மான் 132 ரன்களையும், முகமது ரிஸ்வான் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை