அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களுக்கான பாகிஸ்தான் டி20 அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணி வீரர்களை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், இத்தொடருக்காக தயாராகும் வகையில் பல்வேறு அணிகளும் இருதரப்பு டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது ஐயர்லாந்து மற்றும், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் மே 10 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணியானது 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது மே 22ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடர்களில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதம்படி பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில், நியூசிலாந்து தொடரில் இடம்பிடித்த வீரர்களே பெரும்பாலும் இடம்பிடித்துள்ளது. அதன்படி முகமது ரிஸ்வான், ஃபகர் ஸமான், முகமது ஹமீர், ஷாஹீன் அஃப்ரிடி, உஸ்மான் கான் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் அத்தொடரில் இடம்பிடிக்காத அஸாம் கான், இமாத் வசீம், ஹசன் அலி, ஹாரிஸ் ராவுஃப், நசீம் ஷா ஆகிய வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி: பாபர் ஆசாம் (கேப்டன்), அப்ரார் அகமது, ஆசம் கான், ஃபகார் ஸமான், ஹாரிஸ் ராவுஃப், ஹசன் அலி, இஃப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அஃப்ரிடி, முகமது அமீர், முகமது ரிஸ்வான், முகமது இர்ஃபான் கான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, ஷதாப் கான், ஷஹீன் ஷா அஃப்ரிடி, உஸ்மான் கான்.
அயர்லாந்து - பாகிஸ்தான் தொடர் அட்டவணை
- மே 10 - அயர்லாந்து vs பாகிஸ்தான், முதல் டி20, டப்ளின்
- மே 12 - அயர்லாந்து vs பாகிஸ்தான், 2ஆவது டி20, டப்ளின்
- மே 14 - அயர்லாந்து vs பாகிஸ்தான், 3ஆவது டி20, டப்ளின்
இங்கிலாந்து - பாகிஸ்தான் தொடர் அட்டவணை
- மே 22 - இங்கிலாந்து vs பாகிஸ்தான், முதல் டி20, லீட்ஸ்
- மே 25 – இங்கிலாந்து vs பாகிஸ்தான், 2ஆவது டி20, பர்மிங்ஹாம்
- மே 28 - இங்கிலாந்து vs பாகிஸ்தான், 3ஆவது டி20, கார்டிஃப்
- மே 30 – இங்கிலாந்து vs பாகிஸ்தான், 4ஆவது டி20, ஓவல்