பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஷான் டெய்டின் பேச்சால் வெடித்த புது சர்ச்சை!

Updated: Sat, Oct 01 2022 21:53 IST
Image Source: Google

பாகிஸ்தன் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 7 டி20 போட்டிகள் கொண்ட தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. வரவுள்ள டி20 உலகக்கோப்பை தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி இதுவரை நடைபெற்று முடிந்த 6 டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. கடைசியாக நடைபெற்ற 6ஆவது போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 170 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி 14.2 ஓவர்களிலேயே எட்டி அசத்தியது. 

பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து இப்படி ஆதிக்கம் செலுத்துவது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்நிலையில் இதுவே தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. போட்டி முடிந்த பிறகு செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் பாகிஸ்தான் அணி சார்பில் பவுலிங் பயிற்சியாளர் ஷான் டெய்ட் கலந்துக்கொண்டார். 

அப்போது பேசிய அவர், " பாகிஸ்தான் வெற்றி பெறும் போது வேறு ஒருவரை அனுப்பிவிட்டு, நன்கு அடிவாங்கும் போது என்னை அனுப்புகின்றனர். இது மனதிற்கு கவலையாக இருக்கிறது" என அதிருப்தியை கூறிவிட்டார்.

 

இதனை கேட்ட அதிகாரி ஒருவர் உடனடியாக அவரது மைக்கை ஆஃப் செய்துவிட்டு, டெயிட்டிடம், நீங்கள் நலமாக தான் இருக்கிறீர்கள், நீங்கள் பேசும் வார்த்தைகள் பாகிஸ்தானுக்கு எதிராக உள்ளது, அது சர்ச்சையாகும் எனக்கூறினார். இதன்பின்னர் டெயிட் சரியாக பேசினர். எனினும் அவரின் முகத்தில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான அதிருப்தி இருந்தது தெளிவாக தெரிந்தது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் செய்தியாளர் சந்திப்பு பரபரப்புடனே காணப்பட்டது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை