கோலியை பின்னுக்குத் தள்ளிய அசாம்; ஐசிசி தரவரிசையில் புதிய மைல்கல்!

Updated: Wed, Apr 14 2021 14:08 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமாக திகழ்பவர் பாபர் அசாம். இவர் சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இப்பட்டியலில் முதலிடத்திலிருந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியைப் பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளர். 

இப்பட்டியலில் விராட் கோலி 857 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ரோஹித் சர்மா 825 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர். அதேபோல் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற ஃபகர் ஸ்மான் 778 புள்ளிகளைப் பெற்று 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::