தொடர் தோல்வி எதிரொலி: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கம்!

Updated: Thu, Dec 22 2022 13:27 IST
Image Source: Google

பாகிஸ்தானில் 17ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரில் விளையாட வந்த இங்கிலாந்து அணி , 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் முதன்முறையாக ஒயிட்வாஷ் செய்து சாதனைப் படைத்தது.

இந்த படுதோல்வியின் காரணமாக பாகிஸ்தான் நிர்வாகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக செயல்பட்டு வந்த் ரமீஸ் ராஜாவை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியுள்ளது. 

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) புதிய தலைவராக முன்னாள் பத்திரிகையாளர் நஜாம் சேத்தியை நியமிப்பதற்கும், தற்போதைய ரமிஸ் ராஜாவை நீக்குவதற்கும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள், இந்த நியமனம் தொடர்பான நான்கு அறிவிப்புகளை பிரதமர் அலுவலகம் வெளியிடும் என்று தெரிவித்தனர். கிரிக்கெட் வாரியத்தின் 2019 அரசியலமைப்பை நீக்குவது குறித்து அறிவிக்கும் அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் தலைவராக நியமிக்கப்பட்டார் ரமீஸ் ராஜா, சமீபத்தில் முடிவடைந்த வரலாற்று டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பிசிபியால் நீக்கப்பட்டுள்ளார். புதிய பிசிபி தலைவராக சேத்தியின் நியமனத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் புதன்கிழமை ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆகஸ்ட் 27, 2021 அன்று அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானால் நேரடியாக பரிந்துரைக்கப்பட்ட ராஜா, இஜாஸ் பட், ஜாவேத் புர்கி மற்றும் அப்துல் ஹபீஸ் கர்தாருக்குப் பிறகு தலைவராக ஆன 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆவார். 2003 முதல் 2004 வரை பிசிபி தலைமை நிர்வாகியாக பணியாற்றிய பிறகு, பிசிபியில் ராஜா இரண்டாவது முறையாக தலைவராக  இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை