ZIM v PAK: பாகிஸ்தானை பழி தீர்த்த ஜிம்பாப்வே!

Updated: Sat, Apr 24 2021 04:54 IST
Image Source: Google

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றிபெற்று அசத்தியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது, இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தான் அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை சேர்த்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக டினாஷே கமுன்ஹுகாம்வே 34 ரன்களை சேர்த்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது ஹுசைன், தானிஷ் அஸிஸ் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம், முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

பின்னர் 13 ரன்களில் ரிஸ்வான் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் அசாமுன் 43 ரன்கள் எடுத்திருந்த நிலை ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் வந்த வீரர்கள் ஜிம்பாப்வேயின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து  விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 19.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை