ஆறாண்டுகளுக்கு பிறகு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்யும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வருகிற நவம்பர் மாதம் வங்கதேசம் செல்லவுள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது.
முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணி, அதன்பின் 6 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை நபவம்பர் 15ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், நம்பவர் 19ஆம் தேதி பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி தொடங்கவுள்ளது.
மேலும் இத்தொடரின் டி20 போட்டிகள் அனைத்தும் தாக்காவிலும், டெஸ்ட் போட்டிகள் சிட்டாகாங் மைதானத்தில் நடைபெறுகிறது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
தொடர் அட்டவணை
- நவம்பர் 19-முதல் டி 20, ஷேர்-இ-பங்களா தேசிய மைதானம், தாக்கா
- நவம்பர் 20-இரண்டாவது டி 20, ஷேர்-இ-பங்களா தேசிய மைதானம், தாக்கா
- நவம்பர் 22-மூன்றாவது டி 20, ஷேர்-இ-பங்களா தேசிய மைதானம், தாக்கா
- நவம்பர் 26-30-முதல் டெஸ்ட், ஜாகூர் அகமது சவுத்ரி மைதானம், சிட்டாகாங்
- டிசம்பர் 4-8-இரண்டாவது டெஸ்ட், ஷெர்-இ-பங்களா தேசிய மைதானம், தாக்கா