சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் ஆசாம் சாதனை!

Updated: Tue, Mar 29 2022 22:35 IST
Image Source: Google

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருடன் பாபர் அசாமும் சேர்த்து மதிப்பிடப்படுகிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக விளையாடி சாதனைகளை படைத்துவருகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் பல பேட்டிங் சாதனைகளை தகர்த்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். அந்தவகையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங் ஆடிவரும் பாபர் அசாம் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

82வது சர்வதேச ஒருநாள் இன்னிங்ஸில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை விரைவாக எட்டிய வீரர்களில் ஹாஷிம் ஆம்லாவிற்கு அடுத்து 2ஆம் இடத்தை  பிடித்துள்ளார் பாபர் அசாம். ஹாஷிம் ஆம்லா 81 இன்னிங்ஸ்களில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டினார்.

3000 ரன்களிலிருந்து 4000 ரன்களை எட்ட 14 இன்னிங்ஸ்கள் மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளார் பாபர் அசாம். இதே 3000-4000 ரன்களுக்கு டேவிட் வார்னர் 12 இன்னிங்ஸ்கள் தான் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::