பாகிஸ்தான் vs நியூசிலாந்து, முதலாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம்!

Updated: Thu, Apr 13 2023 22:34 IST
Image Source: CricketNmore

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை லாகூரிலுள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs நியூசிலாந்து
  • இடம் - கடாஃபி கிரிக்கெட் மைதானம், லாகூர்
  • நேரம் - இரவு 9.30 மணி

போட்டி முன்னோட்டம்

பாபர் ஆசாம் தலைமையில் களமிறங்கவுள்ள பாகிஸ்தான் அணியானது சமீபத்தில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வியடைந்து தொடரையும் இழந்தது. இதனால் இத்தொடரில் தங்களது நிலைப்பாட்டை பாகிஸ்தான் அணி மாற்றி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப காத்திருக்கிறது. 

அதேசமயம் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், ஃபகர் ஸமான், ஷான் மசூத், இஃப்திகார் அஹ்மத், முகமது ஹாரிஸ் என அதிரடி வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். பந்துவீச்சில் நிண்ட நாள்களாக சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்காமல் இருந்த ஷாஹின் அஃப்ரிடி மீண்டும் அணிக்குள் இடம்பிடித்துள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 

அவரைத்தாண்டி, ஹாரிஸ் ராவுஃப், இஹ்சானுல்லா, ஃபஹீம் அஷ்ரஃப் போண்ட அசுர வேகப்பந்துவீச்சாளர்களும் அணியில் இருப்பது நிச்சயம் எதிரணி பேட்டர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மறுபக்கம் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி சமீபத்தில் இலங்கையுடனான டி20 தொடரை கைப்பற்றிய உத்வேகத்துடன் இத்தொடரில் களம் காணவுள்ளது. அணியின் பேட்டிங்கில் டிம் செய்ஃபெர்ட், சாத் பௌஸ், மார்க் சாப்மேன், டெரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், ரச்சின் ரவீந்திர ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

பந்துவீச்சில் ஆடம் மில்னே, பென் லிஸ்டர், பிளைர் டிக்னர், ஹென்றி ஷிப்லி, மேட் ஹென்றி, இஷ் சோதி என நட்சத்திர வீரர்கள் இருப்பதால் நிச்சயம் வெற்றிக்காக நியூசிலாந்து கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 29
  • பாகிஸ்தான் - 18
  • நியூசிலாந்து - 11

உத்தேச லெவன்

பாகிஸ்தான்: பாபர் அசாம் (கே), முகமது ரிஸ்வான் , முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், ஷஹீன் அஃப்ரிடி, இமாத் வாசிம், இஹ்சானுல்லா, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்.

நியூசிலாந்து - சாட் போவ்ஸ், டிம் செய்ஃபெர்ட், டாம் லாதம் (கே), டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், ரச்சின் ரவீந்திரா, ஆடம் மில்னே, ஹென்றி ஷிப்லி, இஷ் சோதி, பென் லிஸ்டர்.

 டி20 தொடர் அட்டவணை

  • ஏப்ரல் 14 - முதல் டி20 போட்டி, கடாஃபி 
  • ஏப்ரல் 15 - 2வது டி20 போட்டி, கடாஃபி
  • ஏப்ரல் 17 - 3வது டி20 போட்டி, கடாஃபி 
  • ஏப்ரல் 20 - 4வது டி20 போட்டி, ராவல்பிண்டி
  • ஏப்ரல் 24 - 5வது டி20 போட்டி, ராவல்பிண்டி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை