சாம்பியன்ஸ் கோப்பை 2025: பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளின் புள்ளி விவரங்கள்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 நாளை (பிப்ரவரி 19) கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. முன்னதாக இவ்விரு அணிகளும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் மோதிய நிலையில், அதில் நியூசிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்தது அசத்தியது.
அதிலும் குறிப்பாக லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து அணி, பின்னர் நடைபெற்ற இறுதிப்போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டியில் இரு அணிகளின் பிளேயிங் லெவன் மற்றும் நேருக்கு நேர் மோதிய போட்டிகள் குறித்த புள்ளி விவரங்களை இப்பதிவில் பார்ப்போம்.
பாகிஸ்தான் vs நியூசிலாந்து நேருக்கு நேர்
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை 118 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பாகிஸ்தான் அணி 61 ஒருநாள் போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 53 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இது தவிர, ஒரு போட்டி சமநிலையில் முடிந்த நிலையில், மூன்று போட்டிகள் முடிவு எட்டபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில், நியூசிலாந்திற்கு எதிராக விளையாடிய மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தேச லெவன்
பாகிஸ்தான்: ஃபகார் ஜமான், பாபர் அசாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சல்மான் ஆகா, தையாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஹாரிஸ் ரவூஃப், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது.
நியூசிலாந்து: வில் யங், டெவன் கான்வே, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கே), மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, வில்லியம் ஓ'ரூர்க்.
நட்சத்திர வீரர்கள்:
பாபர் ஆசாம்
ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் பாபர் அசாம் தற்போது உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக இரண்டு அரைசதங்களுடன் பாபர் 2024 ஆம் ஆண்டை முடித்தார், ஆனால் சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் முத்தரப்பு தொடரில் அவரது செயல்திறன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவர் தனது ஃபார்மை மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேன் வில்லியம்சன்
நியூசிலாந்தின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் சமீபத்தில் நடைபெற்று முடிந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் 3 இன்னிங்ஸ்களில் 112.50 என்ற சராசரியுடன் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் அவர் 225 ரன்களை எடுத்துள்ளார். இந்தக் காலகட்டத்தில், அவர் ஒருநாள் போட்டிகளில் தனது 7000 ரன்களையும் பூர்த்தி செய்தார்.இதனால் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவரின் பங்கு நியூசிலாந்து அணிக்கு முக்கியமானதாக இருக்கும்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணிகள்
பாகிஸ்தான் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் அசாம், ஃபகார் ஜமான், கம்ரான் குலாம், சவுத் ஷகீல், தையாப் தாஹிர், ஃபஹீம் அஷ்ரஃப், குஷ்தில் ஷா, சல்மான் அலி ஆகா, உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவூஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி.
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து அணி: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), வில் யங், டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திர, கேன் வில்லியம்சன், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், டாம் லேதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, லோக்கி ஃபெர்குசன், பென் சியர்ஸ், வில் ஓ'ரூர்க்