டி20 உலகக்கோப்பை: தோல்விக்கு பின் பாகிஸ்தான் வீரர்கள் வேதனையடைந்தனர் - மேத்யூ ஹைடன்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன.
முன்னதாக நியூசிலாந்து அணி இங்கிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானையும் அரையிறுதிச்சுற்றில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இதில் இரு அணிகளும் இரண்டாவது பேட்டிங் செய்து, 19ஆவது ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தான் வெற்றிபெற்றன. இதனால் சமபலத்துடன் உள்ள இரு அணிகள் மோதும் போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்த நிலையில் அணியின் தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பேட்டிங் மேத்யூ ஹைடன், “பாபர் அசாம் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் ஆகியோர் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டனர்.
பாபர் அசாம் அவரது தலைமை சிறப்பாக இருந்தது. சிறந்த வீரர்கள் சிறந்த கேப்டன்களாக இருப்பதாக நான் உணர்கிறேன். மேலும் அரையிறுதி தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்” என்று தெரிவித்தார்.
Also Read: T20 World Cup 2021
முன்னதாக சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணி ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் வெற்றிகரமான அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.