56 ரன்களில் ஆல் அவுட்டான பாகிஸ்தான்; மோசமான சாதனையில் இரண்டாம் இடம்!

Updated: Tue, Oct 15 2024 10:25 IST
Image Source: Google

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதிலும் 111 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 56 ரன்களில் ஆல் அவுட்டானது.

இந்நிலையில் இப்போட்டியில் படுதோல்வியைச் சந்தித்துள்ள பகிஸ்தான் அணி மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. அதன்படி மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது குறைந்த ஸ்கோரை அடித்த அணி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வங்கதேச அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது. 

இப்போட்டியைப் பற்றி பேசினால், இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சூஸி பேட்ஸ் 28 ரன்களும், புரூக் ஹாலிடே 22 ரன்களையும் சேர்த்தன்ர். பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய் அநஷ்ரா சந்து 3 விக்கெட்டுக்களையும், சாதியா இக்பால், நிதா தார், ஒமைமா சொஹைல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அதன்பின் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி நியூசிலாந்தின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன் வெறும் 11.4 ஓவர்களில் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஃப்பாத்திமா சனா 21 ரன்களை எடுத்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். நியூசிலாந்து தரப்பில் அமிலியா கெர் 3 விக்கெட்டுக்களையும், ஈடன் கார்சன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

Also Read: Funding To Save Test Cricket

இந்த தோல்வியின் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் பயணமும் முடிவடைந்ததுடன், இந்திய அணியும் அரையிறுதிக்கான போட்டியில் இருந்து வெளியேறியது. அதேசமயம் இப்போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நியூசிலாந்து மகளிர் அணி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் டி20 உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இதற்கு முன் நியூசிலாந்து அணி கடந்த 2016ஆம் ஆண்டு அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை