Nashra sandhu
56 ரன்களில் ஆல் அவுட்டான பாகிஸ்தான்; மோசமான சாதனையில் இரண்டாம் இடம்!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதிலும் 111 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 56 ரன்களில் ஆல் அவுட்டானது.
இந்நிலையில் இப்போட்டியில் படுதோல்வியைச் சந்தித்துள்ள பகிஸ்தான் அணி மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. அதன்படி மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டாவது குறைந்த ஸ்கோரை அடித்த அணி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வங்கதேச அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது.
Related Cricket News on Nashra sandhu
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்தை 110 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 111 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி; இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47