2021ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரராக பாபர் ஆசாம் தேர்வு !

Updated: Mon, Jan 24 2022 14:40 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஒட்டுமொத்தமாக சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கவுரவிக்கும்.

கடந்த சில தினங்களுக்கு முன் டி20 கிரிக்கெட்டில் 2021ஆம் ஆண்டின் சிறந்த வீரராக பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வானை தேர்வு செய்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் ஆசாம் 2021ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன், தென் ஆப்பிரிக்காவின் ஜேனிமேன் மலான் மற்றும் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் ஆகியோர் பரிந்துரைப் பட்டியலில் தேர்வாகினர்.

பாபர் அசாம் கடந்த ஆண்டில் மொத்தம் 6 போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 3-0 என பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. ஆனாலும் இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது போட்டியில் 158 ரன்கள் அடித்து அசத்தினார் பாபர் ஆசாம். 

ஏற்கனவே, ஐசிசியின் ஒருநாள் கேப்டன் மற்றும் டி20 அணி ஆகியவற்றுக்காக பாபர் அசாமை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை