PAK vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டிக்கு மாற்றம் - பிசிபி அறிவிப்பு!

Updated: Sun, Aug 18 2024 20:22 IST
Image Source: Google

வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.  இதில் முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 20 முதல் 25ஆம் தேதிவரை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு இவ்விரு அணிகளும் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியானது தற்போது ராவல்பிண்டிக்கு மாற்றியமைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இடையே கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. 

 

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக மைதானத்தை (கேலரி உள்ளிட்ட இடங்கள்) புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாகவே இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. மேலும் ரசிகர்களின் பாதுகாப்புதான் எங்களுடைய முதன்மை நோக்கம் என்றும்,  இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்நிலையில் இப்போட்டியை முழுமையாக ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்திற்கே மாற்றியமைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இப்போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை