பாக்- வங்கதேசம் போட்டியில் பாலஸ்தீன கோடிய காட்டிய ரசிகர்கள் - காவல்துறை நடவடிக்கை!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
இந்நிலையில் நேற்றையை ஆட்டத்தின்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீனக் கொடியை காட்டியதற்காக 4 பேரை கொல்கத்தா காவல்துறையால் கைது செய்துள்ளனர்.
ஆட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது கேட் 6 மற்றும் பிளாக் ஜி1 பகுதிகளில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதை மைதானத்தில் இருந்த காவல்துறையினர் உடனடியாக கண்டறிந்து அவர்களை கைது செய்தனர். அதன் பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பாலி, எக்பால்பூர் மற்றும் கராயா பகுதிகளில் வசிப்பவர்கள் என்று தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் எந்தவித கோஷமும் எழுப்பவில்லை என்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் நால்வரும் நள்ளிரவில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் பால்ஸ்தீன கொடியை காட்டியதாக ரசிகர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மைதானத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.