WTC Final: பும்ராவை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் பேட் கம்மின்ஸ்!

Updated: Sun, Jun 08 2025 21:35 IST
Image Source: Google

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டி வருகிற ஜூன் 11 ஆம் தேதி புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இதற்காக இரு அணி வீரகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின் புதிய சாதனை படைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். அந்தவகையில் தென் அப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் பாட் கம்மின்ஸ் மேலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில், 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் எனும் சாதனையைப் படைக்கவுள்ளார். 

தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக ஜஸ்பிரித் பும்ரா உள்ளார். அவர் 2023-25 சுழற்சியில் 15 போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் அதில் 77 விக்கெட்டுகளை வீழ்த்தி சத்தியுள்ளார். அதேசமயம் ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் 17 போட்டிகளில் 33 இன்னிங்ஸ்களில் 73 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

WTC 2023-25 ​​இல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்

  • ஜஸ்பிரித் பும்ரா - 15 போட்டிகளில் 28 இன்னிங்ஸ்களில் 77 விக்கெட்டுகள்
  • பேட் கம்மின்ஸ் - 17 போட்டிகளில் 33 இன்னிங்ஸ்களில் 73 விக்கெட்டுகள்
  • மிட்செல் ஸ்டார்க் - 18 போட்டிகளில் 35 இன்னிங்ஸ்களில் 72 விக்கெட்டுகள்
  • நாதன் லையன்- 16 போட்டிகளில் 28 இன்னிங்ஸ்களில் 66 விக்கெட்டுகள்

300 டெஸ்ட் விக்கெட்

Also Read: LIVE Cricket Score

இதுதவிர்த்து இப்போட்டியில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 300 டெஸ்ட் விக்கெட்டுகளை பூர்த்தி செய்வார். இதனை அவர் பூர்த்தி செய்யும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக இந்த மைல் கல்லை எட்டும் 8ஆவது பந்துவீச்சாளசர் மற்றும் 6ஆவது வேகப்பந்து வீச்சாளர் எனும் பெருமையையும் பெறுவார். கம்மின்ஸ் இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் 125 இன்னிங்ஸ்களில் விளையாடி 294 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை