திலகரத்ன தில்ஷன் சாதனையை முறியடிக்கவுள்ள பதும் நிஷங்கா!

Updated: Tue, Jul 15 2025 23:25 IST
Image Source: Google

Pathum Nissanka Record: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் திலகரத்னே தில்சனின் சாதனையை முறியடித்து பதும் நிஷங்கா மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணியும் தலா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. இந்நிலையில் இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி டி20 தொடரை கைப்பற்றும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் பதும் நிஷங்கா முன்னாள் வீரர் திலகரத்னே தில்ஷன் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். பதும் நிஷங்கா இதுவரை இலங்கைக்காக 64 டி20 சர்வதேச போட்டிகளில் 63 இன்னிங்ஸ்களில் 1808 ரன்கள் எடுத்துள்ளார். 

இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அவர் மேற்கொண்டு 82 ரன்கள் எடுத்தால், அவர் சர்வதேச டி20 போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் திலகரத்னே திலஷனை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை பெற்றுள்ளார். தற்போது திலகரத்ன தில்ஷன் தனது டி20 சர்வதேச வாழ்க்கையில் 80 போட்டிகளில் 79 இன்னிங்ஸ்களில் 1889 ரன்கள் எடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டி20 சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இலங்கை வீரர்கள்

  • குசல் பெரேரா - 79 போட்டிகளில் 2080 ரன்கள்
  • குசல் மெண்டிஸ் - 80 போட்டிகளில் 2001 ரன்கள்
  • திலகரத்ன தில்ஷன் - 80 போட்டிகளில் 1889 ரன்கள்
  • பதும் நிஸ்ஸங்க - 64 போட்டிகளில் 1808 ரன்கள்

SL vs BAN: Possible XIs

Sri Lanka (SL): பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா (கேப்டன்), அவிஷ்க ஃபெர்னாண்டோ, தசுன் ஷனக, தினேஷ் சண்டிமல், சமிக்க கருணாரத்ன, மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்ஷனா, ஜெப்ரி வான்டர்சே, நுவான் துஷார

Also Read: LIVE Cricket Score

Bangladesh (BAN): நைம் ஷேக், லிட்டன் குமார் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன் தமீம், முகமது ஜேக் அலி, தவ்ஹித் ஹ்ரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், முகமது சைபுதீன், ஷமிம் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை