IRE vs ZIM: ஸ்டிர்லிங் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த அயர்லாந்து!
அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கி அயர்லாந்து அணிக்கு தொடக்க வீரர் பால் ஸ்டிர்லிங் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
அவருடன் இணைந்து விளையாடிய ஆண்ட்ரூ பால்பிர்னி 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டழந்து வெளியேறினார். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பால் ஸ்டிர்லிங் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 178 ரன்களை எடுத்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பால் ஸ்டிர்லிங் 75 பந்துகளில் 8 சிக்சர், 8 பவுண்டரிகளை விளாசி 115 ரன்களைச் சேர்த்தார்.